எங்களைப் பற்றி

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கொள்ளிடம் காவேரி கரை பகுதியான சுந்தரவன சோழவள நாட்டில் (மேய்க்கல்நாயக்கன் பட்டி ), நகையநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் இத்திருக்கோவில் வளாகத்தில், சங்கடத்தை தீர்க்கும் ஸ்ரீ ஏழு சப்த கன்னிமார்கள் ,பல யுகங்கள் வாழும் பதினெட்டு சித்தர்கள் , சஞ்சீவிராய பெருமாள் ( தலைமலை ), எட்டுத்திசையிலும் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி காளியின் முகம் பார்க்கும் கலியுக கண்கண்ட காவல் தெய்வமாக வந்தாரை வாழவைக்கும் வரம்தரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி அனைத்து மக்களின் துயரக் கண்ணீரை துடைக்கும் தெய்வமாக அவதரித்து உள்ளார்.

மேலும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஓம் ஸ்ரீம் விநாயகர் , அகிலத்தை காக்கும் அன்னை ஸ்ரீ மகாகாளி , சர்வ வல்லமை அள்ளித்தரும் ஸ்ரீ பேச்சியம்மன் ,சர்வ ஐஸ்வர்யத்தை அள்ளிதரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி ஆகியோருடன் முப்பத்திமூன்றாவது மூர்த்தமாக இவ்வுலகில் , அகஸ்திய முனிவரால் உருவாக்கப்பட்ட உலக மக்களின் திருஷ்டி தோஷம் நீக்கும் 'ஸ்ரீ மகாசக்தி திருஷ்டி கணபதி' அமைந்திருப்பது இத்திருக்கோவிலின் சிறப்பு ஆகும்.

இத்திருக்கோவிலின் தனி சிறப்பு :

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை , ஞாயிற்றுக் கிழமை மற்றும் மாத அமாவாசை நாட்களில் கோவில் வளாகத்தில் வந்தாரை வாழவைக்கும் அருள்மிகு வரம்தரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி அருள்வாக்கு வழங்கப்படும் . அச்சமயம் தொழில் முன்னேற்றமடைதல், திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களின் தடை நீக்குதல் , குழந்தை பாக்கியம் அருளுதல் , தொழில் மற்றும் வியாபார நஷ்டத்தை நீக்கி கடன் பிரச்சனையை சரி செய்தல் ,கணவன் மனைவி பிரிவை சரிசெய்தல் , கை கால் முடக்கங்கள் மற்றும் மன கோளாறுகள் தீர்த்து வைத்தல் , நிலப்பிரச்னைகள் மற்றும் இடம் கொடுக்கல் வாங்கல் வழக்கு விவகாரங்களை வெற்றி பெறச் செய்தல் , பேய் பிசாசு போன்ற அமானுஷ்யங்களை விரட்டுதல் மற்றும் படிப்புக்கேற்ப வேலைகளை பெறச்செய்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஸ்ரீ கருப்பசாமி அருளால் தீர்வு காணலாம் . மேலும் தெய்வ காட்சிகளை குறிப்பிட்ட நாட்களில் நேரடியாக காணலாம். மேலும் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு வழங்கப்படும் .

குறிப்பு :

இத்திருக்கோவிலில் அனைத்து நாட்களிலும் அன்னதானம் நடைபெறுவது இத்திருக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும் . சித்திரை பிடிகாசு திருவிழா: ஒவ்வொரு வருடமும் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் 1-அம் தேதி அன்று காவேரி கரை இறங்கி சன்னதி வந்து வந்தாரை வாழவைக்கும் வரம் தரும் தரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி அருளால் சித்திரை பிடிகாசு வழங்கப்படும் .

பிடிகாசு பெறுவதின் பலன்கள் :

பிடிகாசை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்வதின் மூலம் எப்பேற்பட்ட கடன் பிரச்னையும் தீரும் பிடிகாசினை ஒரு பகுதி எடுத்து நாம் செய்யும் வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் முதலீடு செய்ய நஷ்டம் நீங்கி எந்த துறையாக இருந்தாலும் செல்வச் செழிப்பும் லட்சுமி கடாட்சமும் பெருகும் . வீட்டில் வைத்து பூஜை செய்வதின் மூலம் அதிர்ஷ்ட லட்சுமிகள் நிரந்தர வாசம் செய்வார்கள் .திடீர் தனலாபம் , பொன் ,பொருள் சேர்க்கை , நிலம் , ஆடை ஆபரண யோகங்கள் உண்டாகும். ஓராண்டு பிடிகாசை சரியான முறையில் பயன்படுத்தி வர, குபேரனுக்கு நிகரான செல்வத்தை பெற்று வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

மஹாசக்தி ஸ்ரீ கண்திருஷ்டி கணபதி

சித்தர்களில் மிகவும் சிறந்தவர்களாகிய பதினெட்டு சித்தர்களில் முதன்மை சித்தரான அகஸ்திய மாமுனிவர், கண்திருஷ்டி என்ற அசுரனை சம்ஹராம் செய்து இந்த உலகையும்,உலக மக்களையும் பாதுகாக்க , ஓர் சர்வ வல்லமை பொருத்திய மஹாசக்தி அவதாரத்தை தோற்றுவித்தார்.அந்த அவதாரம் தான் ஸ்ரீ கண்திருஷ்டி கணபதி ஆகும்.

இந்த கண்திருஷ்டி கணபதி, சங்கு சக்கரதாரியான விஷ்ணுவின் அம்சம் கொண்டும் , சிவபெருமானின் அம்சமான மூன்று கண்களையும், அன்னை பராசக்தியின் அம்சமாக கையில் திரிசூலம் மற்றும் பல்வேறு தெய்வங்களின் ஆயுதங்களையும் ஒருங்கே பெற்று சீறுகின்ற சிம்ம வாகனமும் , மூஞ்சூர் வாகனமும் கொண்டவராக விளங்குகிறார் .இந்த கண்திருஷ்டி கணபதி, தலையைச் சுற்றிலும் சுழலவைக்கும் ஒன்பது நாக தேவதைகளையும் , அக்னி பிழம்புகளையும் , ஐம்பத்தி ஒன்று கண்களையும் கொண்டு தமது அவதார நோக்கத்தில் ஆக்க சக்தியாக இயல்பு நிலைக்கு மாறாக ருத்ர பார்வையோடு விஸ்வரூபம் கொண்டு ( பதினோரு அடியில்) மகா அவதார நிலையில் காணப்படுகிறார் .முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இவ்வுலகில் உதயமான "சர்வ மகா ஷக்தி கணபதி" இவ்வாலயத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு .

கண்திருஷ்டி கணபதியின் பலன்கள் :

வடக்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகரை வழிபட சகல திருஷ்டி தோஷமும் விடுபடும் .தேங்காய் மாலையிட்டு சிதறு தேங்காய் உடைத்து தேன் மற்றும் இஞ்சி நைவேத்யமாக வைத்து வழிபட சகல காரியங்களிலும் வெற்றி கிட்டும் . கடன் பிரச்சனைகள் தீரும் .தன்மீது மட்டுமல்லாது தன் வியாபார அல்லது தொழில்களின் மீதும் உள்ள கண் திருஷ்டி அழிந்து உடனடி நற்பலன்கள் அமையும்.தீராத நோய்கள் தீரும் . ஆதலால்,ஸ்ரீ கண்திருஷ்டி கணபதியை வழிபட்டு நலன் பெற வேண்டுகிறோம்.