இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் கருப்பசாமிக்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் அமாவாசை கருப்பசாமி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்திருக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வேண்டுதல் மற்றும் வாக்குதல் நிறைவேறியதின் பலனாக இக்கோவிலில் ஆடி அமாவாசைக்கு ஆண்கள் , பெண்கள் மாலை அணிந்து விரதம் இருந்து அழகுகுத்தி மற்றும் பூச்செட்டி எடுத்து பல்வேறு விதமாக நேர்த்திகடனைச் செலுத்தி இத்திருவிழா நடைபெறுவது வழக்கம் .ஆடி அமாவாசை அன்று அரிவாள் மேல் ஏறி உலகப் பொது நிகழ்வுகள் உலகப்பொதுக்குறியாக அருள்வாக்கு கூறி பொதுமக்களுக்கும் அருள்வாக்கு நடைபெறும். இவ்விழாவினை தொடர்ந்து இங்குள்ள தேவதைகளுக்கு மாவிளக்கு பூஜை , குத்துவிளக்கு பூஜை , அன்னதானம் மற்றும் வான வேடிக்கை நடைபெறும் .
வருடத்தின் உத்திராயன தைமாத அமாவாசையில் சிறப்பு ஹோமம் நடைபெற்று , வரும் மக்களுக்கு அருளாசி வழங்கப்படும்.
முன்னோர்கள் திதியை குறிக்கும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை அன்று சிறப்பு ஹோமம் நடைபெற்று சிறப்பு அருள்வாக்கு வழங்குவது தனிச்சிறப்பாகும்.
இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் கண்திருஷ்டி கணபதிக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் திருஷ்டி ஹோமம் நடைபெறும் .அதன் சிறப்பாக மக்கள் அனைவரும் கலந்து கொண்டு தம்மீதும் , தம்தொழில் மீதும் உள்ள திருஷ்டிகளை போக்கி கண்திருஷ்டிகள் அழிந்து கடன்பிரச்னைகள் தீர்ந்து லட்சுமி காடசம் மற்றும் செல்வ செழிப்பும் பெற்று மக்கள் பலரும் பலன் அடைந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி அன்று குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கோவில் வளாகத்தில் புத்திர பாக்கியம் வேண்டி சிறப்பு யாகங்கள் மற்றும் பூஜைகள் இலவசமாக செய்து தரப்படும்.
ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய நவராத்திரியின் ஒன்பது தினங்களில் இங்கு உள்ள அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி ஸ்ரீ மகாகாளிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும் .உலக மக்களின் நன்மைக்காக மந்திர பிரயோகங்கள் மற்றும் ஆராதனை நடைபெறுவதால் பொதுமக்கள் இந்த 9 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் பூஜையில் கலந்து கொண்டால் ஆதிபராசக்தி அருளுக்கு பாத்திரமாக அமைவது ஐதீகம்