திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், கொள்ளிடம் காவேரி கரை பகுதியான சுந்தரவன சோழவள நாட்டில் (மேய்க்கல்நாயக்கன் பட்டி ), நகையநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கும் இத்திருக்கோவில் வளாகத்தில், சங்கடத்தை தீர்க்கும் ஸ்ரீ ஏழு சப்த கன்னிமார்கள் ,பல யுகங்கள் வாழும் பதினெட்டு சித்தர்கள் , சஞ்சீவிராய பெருமாள் ( தலைமலை ), எட்டுத்திசையிலும் வீற்றிருக்கும் அன்னை ஆதிபராசக்தி காளியின் முகம் பார்க்கும் கலியுக கண்கண்ட காவல் தெய்வமாக வந்தாரை வாழவைக்கும் வரம்தரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி அனைத்து மக்களின் துயரக் கண்ணீரை துடைக்கும் தெய்வமாக அவதரித்து உள்ளார் .
மேலும் இத்திருக்கோவில் வளாகத்தில் ஓம் ஸ்ரீம் விநாயகர் , அகிலத்தை காக்கும் அன்னை ஸ்ரீ மகாகாளி , சர்வ வல்லமை அள்ளித்தரும் ஸ்ரீ பேச்சியம்மன் ,சர்வ ஐஸ்வர்யத்தை அள்ளிதரும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி ஆகியோருடன் முப்பத்திமூன்றாவது மூர்த்தமாக இவ்வுலகில் , அகஸ்திய முனிவரால் உருவாக்கப்பட்ட உலக மக்களின் திருஷ்டி தோஷம் நீக்கும் 'ஸ்ரீ மகாசக்தி திருஷ்டி கணபதி' அமைந்திருப்பது இத்திருக்கோவிலின் சிறப்பு ஆகும் .
Blessed With Peace